Tuesday, 14 February 2012

Tweets on Tamil Cinema

Tweets on Tamil Cinema (Jan 20):

நம்ம தமிழ்நாட்டு மக்கள், கவலைய மறக்க சினிமாக்கு வரவங்க, உலக சினிமா எடுக்கறேன்னு ஏன் இப்படி? (1/n)

வெளிநாட்டுகாரங்க மாதிரி நாம சாப்பிட்டுட்டு நேரம் போகாம சினிமாக்கு வரவங்க இல்ல, என்ஜாய் பண்ணதான் வறோம். (2/n)

நமக்கே ஆயிரம் கஷ்டம் இதுல அடுத்தவங்க கஷ்டத்த வேற பாத்து அழுகனுமா, சரி அதையாவது கொஞ்சம் சந்தோசமா காட்டலாமே, மைனா மாதிரி.. (3/n)

சிலர் நம்ம ரசனைய உயர்த்துராங்களாம், அப்போ சினிமா வர்றதுக்கு முன்னாடி நாமல்லாம் அறிவே இல்லாம இருந்தாமா? (4/n)

நிஜத்துல அநியாயம் பண்றவங்கள நம்மால ஒண்ணும் பண்ண முடியாது, சினிமால ஹீரோ ஒருத்தன அடிச்சா நமக்கு ஒரு திருப்தி, அதான தமிழ் சினிமா. (5/n)

படம் எடுக்கறது புரடியுசர் காசு, படம் பாக்குறது மக்கள் காசு, ரெண்டுமே உழைச்சு வந்ததுதான், அதுக்கு திரும்ப சந்தோசத்த தர வேணாமா.. (6/n)

இத விட சோக கதை நம்ம ஊர்ல நெறைய இருக்கு. நிஜத்த பாக்கணும்னா நாம ஏன் தியேட்டருக்கு வரணும், தெருவுலே பாக்கலாமே. (7/n)

சில திறமைகளை பாராட்டலாம், ஆனா ரசிக்கமுடியாது. எனக்கு இதெல்லாம் புடிக்கல.அவ்ளோதான். (8/8)

No comments:

Post a Comment